Home / செய்திகள் / இந்திய செய்திகள் / தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு!!

தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு!!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 116 கிமீ தொலைவில் உள்ள சபர்கந்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை சில தினங்களுக்கு முன் பீகாரை சேர்ந்த தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், உபி, பீகார், ம.பி மாநில தொழிலாளர்கள் பீதியில் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறினர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 நாட்களாக குஜராத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தினர் அதிகளவில் வெளியேறி வருவதால், அங்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், பணியாளர்களின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் பணிபுரிய போதிய தொழிலாளர்கள் இன்றி மூடியே காணப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்காக பெயர் பெற்ற குஜராத் தனது பெயரை இழக்கும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: