Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி!!

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி!!

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாத மற்றும் தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாத 10,500 உணவகங்களை, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி (swiggy), ஸொமேட்டோ (zomoto) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமம் பெறாத உணவகங்களுடன் இணைந்து சேவை வழங்க கூடாது என்று ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஸொமேட்டோ நிறுவனம் 2,500 உணவகங்களையும், ஸ்விக்கி 4 ஆயிரம் உணவகங்களையும் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஃபுட்பாண்டா (Food panda) நிறுவனம் 1,800 உணவகங்களையும், உபெர் ஈட்ஸ் (Uber eats) நிறுவனம் இரண்டாயிரம் உணவகங்களையும் தங்களது சேவை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களிடம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: