Home / இன்றைய செய்திகள் / சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..!

எமது “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்சர்லாந்து” அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக, நான்கு தினங்களுக்கு முன்னர் புலிகளின் பினாமி அமைப்பான, “ஈழத் தமிழர் முன்னணி” எனும் அமைப்பின் பெயரிலும், சுவிஸ் புலிகள் எனக் கூறிக் கொள்ளும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” பெயரிலும் வெளிவந்துள்ள அறிக்கையையும், கவனயீர்ப்புப் போராட்ட அறிவித்தலையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை, எமது புங்குடுதீவினதும், புங்குடுதீவு மக்களினதும் “எதிர்கால வாழ்வை” கருத்தில் கொண்டு, எமது புங்குடுதீவு ஒன்றியத்தின் “அனைத்து நிர்வாகசபை, ஆலோசனைசபை, செயற்குழு உறுப்பினர்களின்” முழுவிருப்பத்துடனேயே முடிவெடுத்து அறிவித்து இருந்தோம்.

ஆயினும் தமது “அரசியல் நோக்கத்துக்காக” ஒன்றியத் தலைவர் மீதும், நிர்வாக உறுப்பினர்கள் மீதும் தன்னிச்சையாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அறிக்கை விடுத்துள்ள இவர்கள், முதலில் மனிதநேயத்துடன் செயல்படும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” செயற்பாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருந்த காலத்தில், அதன் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உழைத்தவர்களில் “சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின்” பங்களிப்பும் உள்ளதை மறந்து, இப்போது இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபடுவது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இவர்களின் “உண்மை முகத்தை” அறிந்து கொள்ளுமாறு சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கும், சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கும் அறிய தருகிறோம்..

எதுஎப்படி இருப்பினும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” திட்டமிட்டபடி நடத்தவுள்ள, வடமாகாண ஆளுநருடனான சந்திப்பு, கீழ்காணும் முகவரியில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.. நன்றி..

“போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்,
ஏற்றதொரு பணி செய்வோம்..
எவ்விடர்வரினும் நில்லோம், அஞ்சோம்”..

சுவிஸில் வடமாகாண ஆளுநர் உடனான சந்திப்பு
இடம்:- பேர்ண் மாநிலத்தில் Waldmann str – 17A, 3027 BERN
காலம் & நேரம்:- 11.10.2018 வியாழக்கிழமை மாலை 05.00 க்கு (17.00)
(பேர்ண் புகையிரத நிலையத்தில் இருந்து வருபவர்கள், Brünen Westside நோக்கி செல்லும் எட்டாம் (8) இலக்க TRAM மூலம் Tscharnergut எனும் தரிப்பிடத்தில் இறங்கவும்..)

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்….
077.9485214, 079.9373289

–புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்சர்லாந்து-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: