Home / இன்றைய செய்திகள் / சீரற்ற காலநிலையால் பலியானவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு!!

சீரற்ற காலநிலையால் பலியானவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு!!

நிலவும் சீரற்ற காலநிலையினால் சுமார் 17 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 69 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களினால் 12 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: