Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ)

இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில், “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்

ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் கோரிக்கை புங்குடுதீவு மக்களினால், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.

இதனைஅடுத்து நான்கு தினங்களுக்கு முன்னர் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) தலைமையில் கூடிய நிர்வாக சபையினர், இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதுடன், இரண்டு மாணவர்களுக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபா வீதம் இலங்கை வங்கியில் வைப்பில் இட்டு, அவர்களின் “எதிர்கால கல்விக்கு” உதவுவதென எடுத்த முடிவின் பிரகாரம் இலங்கை வங்கியில் வைப்பில் இடப்பட்டது.

இதனை இன்றையதினம் புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அம்பலவாணர் அரங்கில் நடாத்திய சிறுவர் தின விழாவில் வைத்து, இரு மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில், வணக்கத்துக்குரிய செபமாலை ஜெபஜீவன் (பங்குத்தந்தை, புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம்), திரு.க.குகபாலன் (புவியியல்துறை பேராசிரியர்), திருமதி.கி.சாரதாதேவி (கல்விக்கோட்டப் பணிப்பாளர்-தீவகம்), திரு.கு.சண்முகலிங்கம் (தவிசாளர், சமாதான நீதவான், சமூக சேவகர்), திருமதி.த.சுலோசனாம்பிகை (புங்குடுதீவு தாயகம் அமைப்பின் தலைவி), ஆகியோரினால் “பணம் வைப்பில் இடப்பட்ட புத்தகம்”, வங்கியினால் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள், “தாயகம்” அமைப்பினால் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.

(குறிப்பு..; “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அடுத்தமாத முடிவில் (25.11.2018) அன்று மாலை 04.30 க்கு (16.30) நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
27.10.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: