Home / இன்றைய செய்திகள் / வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார்.

சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றவேளை ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

இதேவேளை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், அதன் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) “புங்குடுதீவின் அபிவிருத்தி சார்ந்தும், புங்குடுதீவில் உள்ள மக்களின் நன்மை சார்ந்தும்” குடிநீர், வீதி திருத்தம், மின்சாரவசதி உட்பட குளங்கள் புனரமைப்பு சம்பந்தமான பல கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து இருந்தார்.

இதுக்கு பதிலளித்த வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்கள் “தாம் இலங்கை சென்றதும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து தருவதாக” உறுதி அளித்து இருந்தார்.

இதன் முதல்கட்டமாக, “வடமாகாண ஆளுநர்” திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களின் பணிப்புக்கு இணங்கவும், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்கவும், உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுநரின் செயலாளரான “புங்குடுதீவு மண்ணின் மைந்தன்” திரு.இ.இளங்கோவன், கமநல சேவையின் பெரும்பாக உத்தியோகத்தர் திரு.நா.முருகதாஸ், ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன், தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றுள்ள “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.பா.தயாபரன் (தயா), ஒன்றிய உறுப்பினரான திரு.சுதாகரன் ஆகியோர் நேரடியாக சென்று இன்று முதல்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

முதலாவதாக “வேலணை பிரதேச மின்சார அத்தியட்சகர்” திரு.நிசாந்தன் அவர்களை இன்றையதினம் நேரில் சந்தித்து புங்குடுதீவு பிரதேசத்தின் மின்விளக்குகள் பொருத்துதல் சம்பந்தமாக உரையாடி உள்ளதுடன் “மடத்துவெளி முதல் கொண்டு ஊரதீவு பிரதேசம் வரையான (உள்பிரதேசங்கள் உட்பட) மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையை” அடுத்தவாரம் அளவில் ஆரம்பிக்க உள்ளனர்.

ஏனெனில் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பின் போது “புங்குடுதீவில் மின்சார வசதி சம்பந்தமாக” உரையாடிய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” உறுப்பினரான திரு.சௌந்தரராஜன் (சௌந்தி) இதனை வலியுறுத்தி உரையாடி இருந்தார். இதுக்கு பதிலளித்த வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்கள் “மின்கம்பம், மின்னிணைப்பு போன்றவற்றுக்கு தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும், ஆயினும் மின்விளக்குகளை அந்தந்த பகுதி மக்களே பொருத்த வேண்டுமெனவும்” கூறி இருந்தார். இதனை நாம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் பகிரங்கமாக அறிவித்து இருந்தோம்.

இதன் எதிரொலியாக, “மடத்துவெளி முதல் கொண்டு ஊரதீவு பிரதேசம் வரையான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையை” உடனடியாக “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் மேற்கொள்ள வேண்டுமெனவும், இதுக்குரிய மின்விளக்குக்கான செலவை “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய நிர்வாகத்தின்” சார்பில், சுவிஸில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு, வரதீவு மக்களிடம் தாம் நிதி சேகரித்து தருவோமென “ஒன்றிய பொருளாளர்” திரு.குழந்தை, ஒன்றிய முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.சண்முகம் (சூரிச்) ஆகியோரினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, இந்நடவடிக்கை ஆரம்பமாக உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநரின் செயலாளரான திரு.இ.இளங்கோவன், “ஏற்கனவே பிரதேசசபை உறுப்பினர்கள் சிலரின் நிதி ஒதுக்கீட்டிலும், புங்குடுதீவு சர்வோதயம், திரு.சின்னத்தம்பி குமாரதாஸ் (நேசண்ணர்), மற்றும் இறுப்பிட்டி, வல்லன், ஆலடி போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்களினால் சுமார் 150 க்கும் மேற்படட மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திரு.கி.பாஸ்கரன் என்பவரினால் புங்குடுதீவு/ மடத்துவெளி – கம்பிளியன் வீதி மற்றும் கிராமத்தின் கடற்கரையின் ஒரு பகுதிக்கு சில மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது”.

“இப்போது “மடத்துவெளி முதல் கொண்டு ஊரதீவு பிரதேசம் வரையான (உள்பிரதேசங்கள் உட்பட) மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைக்கு” சுமார் எழுபத்தைந்து மின்விளக்குகள் தேவை என்பதையும், ஒரு மின்விளக்குக்கு சுமார் நாலாயிரத்து ஐந்நூறு ரூபா (4500) வீதம் (சென்சாருடன் கூடிய மின்விளக்குகள்) தேவைப்படுமெனவும் மின்சார அத்தியட்ச்கர் தெரிவித்து உள்ளார். இதனை மிகவிரைவில் ஆரம்பித்து கட்டம்கட்டமாக நிறைவேற்றுவோம்” எனவும் உறுதி தந்துள்ளார்.

இதேபோன்று புங்குடுதீவின் ஏனைய பிரதேச மக்களும் “எழுத்து மூல” வேண்டுகோளுடன், நிதிப் பங்களிப்பை அளிக்க முன்வந்தால், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” முன்னின்று தனது கடமையை திறம்பட நிறைவேற்றித் தரும் என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

இன்றையதினம் யாழ், வேலணை, புங்குடுதீவு பிரதேசங்களில் பெய்யும் கடும்மழையையும் பொருட்படுத்தாது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் அதன் தலைவர் முன்வைத்த கோரிக்கையை சிரமேற்கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் எமது நன்றி..

(குறிப்பு..; “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை மாத முடிவில் (25.11.2018) அன்று மாலை 04.30 க்கு (16.30) நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
01.11.2018

(*** இதேவேளை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்துக்காக” புங்குடுதீவின் வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், புங்குடுதீவில் உள்ள குளங்கள் புனரமைப்பு சம்பந்தமாகவும், “சந்திப்புக்களும், கலந்துரையாடலும், நடைபெறும் வேலைகள் சம்பந்தமான விளக்கங்களும்” இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.. இவை குறித்த செய்திகளும், படங்களும் தொடரும்… நன்றி..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: