Home / இன்றைய செய்திகள் / “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இம்மாத முடிவில் நடத்துவதென உங்களுக்கு அறிவித்து இருந்த போதிலும், அன்றையதினமும் (25.11.2018) சூரிச் மாநிலத்தில் “மாவீரர் தினம்” நடைபெற உள்ளதினால்,

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இருவாரத்தின் பின் அதாவது, 09.12.2018 அன்று மாலை 04.30 க்கு (16.30) புர்கடோர்ப் மாநிலத்தில் நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.

மேற்படிக் கூட்டத்தில், செயலாளரின் கடந்த கூட்டறிக்கை, பொருளாளரின் இவ்வருடக் கணக்கறிக்கை ஆகியவற்றுடன் நிர்வாகசபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களான..
1) 2019 க்கான “வேரும் விழுதும்” நிகழ்வு..
2) புங்குடுதீவெங்கும் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை..
3) குளங்கள் புனரமைப்புக்கான நடவடிக்கை..
4) பெரியகிறாய், சின்னக்கிறாய் புனரமைப்பு நடவடிக்கை..
5) கடல்நீரை நன்னீராக்கும் நடவடிக்கை (இதுகுறித்து கனடாவில் உள்ள திரு.சத்தி அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்படும்)
போன்றவை தொடர்பாக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன..

இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களையும் (குறிப்பாக பொறுப்பில் உள்ளோர்) தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். (பொறுப்பில் உள்ள எவராயினும் தகுந்த காரணங்களின்றி மூன்று கூட்டத்துக்கு மேல் சமூகம் அளிக்காவிடில், அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) நன்றி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
13.11.2018

**** முக்கிய குறிப்பு….
“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” குறித்தோ, அதன் உறுப்பினர்கள் குறித்தோ “ஒன்றியம் சார்ந்து” தரக்குறைவான, & உண்மைக்கு புறம்பான விமர்சனங்களை முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் (பகிரங்கத்தில்) முன்வைத்து விட்டு, அதன் பின்னர் ஒன்றியம் அதுக்கு பதில் தருமென எதிர்பார்ப்பதும், காத்திருப்பதும் எமக்கு ஏற்புடையது அல்ல..

“யார் குத்தியும்” அரிசியாகினால் சரியென நாம் (ஒன்றியம்) நினைத்து, யார் “மின்விளக்கு பொறுத்தினாலும் நல்லதென” அமைதி காத்த போதிலும்.. அதேவேளை, தம்முடைய “தனிப்பட்ட குரோதங்கள், பகைகளை” மனதில் வைத்து எழுதும் எழுத்துக்கள் “ஒன்றியத்தையும்” பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சிலவிடயங்களில் விட்டுக் கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகவே சில செயற்பாடுகள் முடிவுற்ற பின்னர் அனைத்து புங்குடுதீவு மக்களுக்கும், விபரம் தரப்படும். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: