திரு. ஏரம்பு பசுபதி
உரிமையாளர்- இலட்சுமி மரக்காலை ஊர்காவற்துறை, பெருங்காடு புங்குடுதீவு, முன்னை நாள் தலைவர் புங்/நயி. ப.நோ.கூ.சங்கம்
வயது 81
பிறந்த இடம் -யாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் -வவுனியா கொழும்பு
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு பசுபதி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, ரோஸ்மேரி தம்பதிகளின் மருமகனும்,
எலிசபெத்ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனகுமார்(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(பிரித்தானியா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), மகேந்திரா(நோர்வே), வளர்மதி(நோர்வே), தேவமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பராசக்தி, இலட்சுமி, காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, சிவலிங்கம்(அம்மான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜநிதி(பிரான்ஸ்), பிருந்தா, மைதிலி(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(நோர்வே), அன்பழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு, பசுபதி, இராசலிங்கம் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தட்ஷயா, அபினா, அஸ்வினா, அக்ஸனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
டேனுஷா, அனுக்ஷா, சதுஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்