Home / இன்றைய செய்திகள் / வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய ஜேர்மன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மாத்தறை, மடிஹ பகுதியில் அலையில் விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: