Home / இன்றைய செய்திகள் / இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்!!

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்!!

இரண்டு நாட்களுக்கு (மார்ச் 17 ஆம், 18 ஆம்திகதிகளில்) குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் வீசக்கூடும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வட கிழக்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: