Home / இன்றைய செய்திகள் / சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியர்கள் இருவர் கைது!!

சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியர்கள் இருவர் கைது!!

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 இந்திய பிரஜைகளை இன்று (17) காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவிலில் இருந்து 3 மாத சுற்றுலா விசாவில் 2 இந்தியவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்திய போது அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபடடமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: