Home / இன்றைய செய்திகள் / மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்பு!!

மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்பு!!

வெசாக் நிகழ்வு தினத்தின் போது அதிக விலையில் விற்பதற்காக மாத்தளையில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 175 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு நேற்று மாலை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 750 மில்லி லீட்டர் உடைய 50 மதுபான போத்தல்கள் மற்றும் 175 மில்லி லீட்டர் உடைய 125 மதுபான போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரும் குறித்த மதுபான போத்தல்களும் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளன.

மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: