Home / இன்றைய செய்திகள் / இலங்கை – பாகிஸ்தான் இடையே வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்?

இலங்கை – பாகிஸ்தான் இடையே வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்?

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியுன் வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பாகிஸ்தானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பத்திரிகைக்காக செய்தி வெளியிட்ட அஸ்லாம் பக்காலி என்ற நபர் கராச்சியில் உள்ள இலங்கை கவுன்சில் அலுவலகத்தை தொடர்புபடுத்தி இருந்தது.

இவ்வாறான விடயத்தை தாம் தெரிவிக்கவில்லை என்று அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியருக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: