Home / இன்றைய செய்திகள் / உயிர்த்தெழுந்த தாக்குதல் தொடர்பில் கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு!!

உயிர்த்தெழுந்த தாக்குதல் தொடர்பில் கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு!!

உயிர்த்தெழுந்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 7 பேர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பென்சேகா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஆசு மாறசிங்க, காவிந்த ஜயவர்த்தன, எம்.ஏ .சுமந்திரன் ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: