Home / இன்றைய செய்திகள் / புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு!!

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு!!

புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கூறியுள்ளது.

இது தொடர்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

சிகரட் சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நாட்டிற்கு மிகவும் பாதகமானதொன்றாகும். சுகாதார தரவூகளுக்கு அமைய எமது நாட்டில் நிகழும் மரணங்களில் 1/10 புகைத்தலினால் ஏற்படுகின்றது மற்றும் இது வருடமொன்றிற்கு 20000 ற்கும் அதிகமானோர் மரணிக்கக் காரணமாக அமைகின்றது. பல்லாயிரக்கணக்கானோர் புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்காகச் சிகிச்சை பெறுகின்றனர். புகைத்தலினால் மரணித்தவர்களுகளினதும், நோய்வாய்ப்பட்டவர்களினதும் சுகாதார செலவிற்காக 2015ம் ஆண்டில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் ரூபா 90 பில்லியன்; செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் சிகரட் புகைப்பவர்கள் நாளொன்றிற்கு ரூபா 40 கோடி செலவிடுகின்றனர். இவர்களில் பெருமளவிலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களென ஆய்வூகளின் மூலம் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் 2019 மே 30ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுஇ “கிட்டத்தட்ட 40000 சீன பணியாளர்கள் எமது நாட்டில் தொழில் புரிகின்றனர் அவர்களுக்கு சீனாவில் உற்பத்தியாகும் சிகரட் தேவைப்படுகிறதுஇ ஆகவே சீன புகையிலைக் கம்பனி ஒன்றினை எமது நாட்டில் நிறுவப்படவூள்ளது” என குறிப்பிட்டார். அதனூடாக அரசாங்கத்திற்கு மேலதிக இலாபம் கிடைக்கும் எனவூம் அவர் மேலும் குறிப்பிட்டார் .

குறிப்பிட்ட அறிவிப்பின் பின்னர் நாம் சில விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியூள்ளது. தற்போது இருக்கும் புகையிலைக் கம்பனியினாலும் (பிரித்தானியா அமெரிக்கா பெயரில் இலங்கையில் இயங்கும் புகையிலை நிறுவனம்) பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அத்தோடு இன்னுமொரு நாட்டிலிருந்து சிகரட் இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கப்படும் போது எமது நாட்டிற்கு ஏற்படக்கூடிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்கள் தொடர் பில் கவனிக்க வேண்டியூள்ளது.

1. சிகரட் பாவனையினால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளை கருத்திற்கொண்டும்இ சிகரட் பாவனையானது பாரிய பொருளாதார நெருக்கீடுகளை ஏற்படுத்துவதினாலும் நாட்டில் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. விசேடமாக எம்மைப்போன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இப்பொருளாதாரப் பிரச்சினை மேலோங்கிக் காணப்படுகின்றது. உலகில் சிகரட் புகைப்பவர்களில் 80 வீதமானோர் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே உள்ளனர் அத்தோடு சிகரட்டின் ஊடாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் மேலும் இலாபமடைகின்றது.

2. நிதி அமைச்சின் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்தை அதிகாரிப்பதென்றால்இ தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் புகையிலைக் கம்பனியின் உற்பத்திகளுக்கு முறையான வரி அறவீட்டு முறையொன்றினை அறிமுகப்படுத்தி வருமானத்தை அதிகாரத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால்இ மற்றுமொரு சிகரட் கம்பனிக்கு அனுமதி கொடுத்து அதிலிருந்து வருமானத்தை ஈட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. நிதி அமைச்சின் “பிரச்சினைக்குரிய வரி அறவீட்டு முறையினால்” தற்போதும் கூட புகையிலைக் கம்பனியிடம் இருந்து அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய பாரியளவு வரி வருமானம் கிடைக்காமல் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2013 – 2018) மட்டும் நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய வரித்தொகையான ரூபா 100 பில்லியன் இழக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சானது தற்போது உள்ள புகையிலைக் கம்பனியிடமிருந்து கூட முறையாக வரி அறவீடு செய்யாமலிருக்கும் நிலையில் இன்னுமொரு சிகரட் கம்பனிக்கு அனுமதி வழங்கி வருமானம் ஈட்டப்போவதாகத் தெரிவித்துள்ளமை நகைப்புகுரியது.

3. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) புகையிலைக் கட்டுப்பாட்டினை நோக்காக்கொண்டு “புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச சட்டவாக்கம் (FCTC)” உருவாக்கியூள்ளது. புகைபொருள் பாவனையினால் ஏற்படும் பொருளாதார நட்டத்தை தடுத்தல் இச்சட்டவாக்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். எமது நாடும் குறித்த சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்;துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு குறித்த சட்டவாக்கத்தின் அம்சங்களை சிறப்பாக செயற்படுத்தும் நாடாகவூம் உள்ளது. ஆனால் புதிய சிகரட் இறக்குமதி தொடர்பான தீர்மானத்தினால் சர்வதேச சட்டவாக்கத்தை மீறும் செயல் உருபெற்றுள்ளது.

4. ஒன்றிற்கு அதிகமான சிகரட் நிறுவனங்கள் காணப்படும் போது வியாபாரச் சந்தையில் பல்வேறு பாதகமான விளைவூகள் ஏற்படும் அதாவதுஇ சந்தையில் போட்டித்தன்மை உருவாகுதல்இ சிகரட் விற்பனை போட்டியூடனான வியாபாரமாக மாறுதல்இ விளம்பர உத்திகள் அதிகரித்தல்இ சிகரட் கம்பனிகளின் தலையீடுகள் அதிகரித்தல்இ அரசியல்வாதிகளை விலைகொடுத்து வாங்கும் முயற்சி அதிகரித்தல்இ தேரதலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேவைகளுக்காகப் பணம் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சட்டவிரோத அனுசரணை பெற்றுக்கொடுத்தல் என்பன இருமடங்கு மும்மடங்குகளாக அதிகரிக்கும். இவ்வாறான பின்னணியில் நாட்டின் இளம் தலைமுறையினர் சிகரட் உட்பட ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகும் வீதம் சடுதியாக அதிகாரிக்கும். (சிகரட் பாவனையானது சட்டவிரோத போதைப்பொருட்களான (கஞ்சா,ஹெரோயின்…) ஆகிய பாவனைகளுக்கு இளைஞர்களை தள்ளும் ஒரு பிரதான ஆரம்ப நிலை ஊக்கியாகத் தொழிற்படும் பொருளாகும்)

5. தற்போது எமது நாட்டில் சிகரட் பாவனையானது 14வீதம் ஆகும். பாவனையானது படிப்படியாகக் குறைந்து செல்வது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமாக உள்ளது. எனினும் புதிய சிகரட் கம்பனியானது புதிய பாவனையாளர்களை உருவாக்கும் நோக்கில்; புதியவகை சிகரட் மற்றும் விலை குறைந்த சிகரட் போன்றன அறிமுகப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அதன் காரணத்தால்இ எமது நாட்டில் எதிர்வரும் காலங்களில் சிகரட் பாவனை அதிகாரி ப்பதைத் தவிர்க்க முடியாது.

6. வெளிநாட்டவர்களின் நல்வாழ்வூ தொடர்பில் அரசு கரிசனையூடன் செயற்படுமாயின் செய்யவேண்டியது அவர்களின் சிகரட் பாவனையைக் குறைப்பதாகும்இ தற்போது நிகழும் மரணங்களில் அதிகமானவை தடுக்கக்கூடிய மரணங்களாகவே உள்ளதுஇ அவற்றிற்கு சிகரட் பாவனை பிரதான காரணியாகும். சிகரட்; பாவனையானது மனிதர்களின் வினைத்திறனை குறைக்கும் பிரதான காரணியாகும். ஆகவே மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படும் எந்தவொரு அரசாங்கமும் சிகரட்; பாவனை அதிகரிக்கும் வகையிலான எந்தவொரு தீர்மானங்களை மேற்கொள்ளாது.

7. சிகரட் பெட்டிகளில் உருவப்படச் சுகாதார எச்சரிக்கைகளைப் பிரசுரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை புகையிலைக் கம்பனியானது நீதிமன்றம் வரை சென்று 3 ஆண்டுகள் அதனைக் காலம் தாழ்த்தியமை நாம் அனைவரும் அறிந்த விடயம். அவ்வாறான நிலையில் மற்றுமொரு சர்வதேச புகையிலைக் கம்பனியின் வருகையானது சிகரட் பாவனை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

8. சந்தையில் காணப்படும் சிகரட்டுகளில் 1/3 சட்டவிரோதமான சிகரட் என ஆய்வூகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத சிகரட் வியாபாரம் என்பதுஇ சர்வதேச புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் வரி மோசடி செய்வதற்காக மேற்கொள்ளும் தந்திரோபாயம். இவ்வாறான நிலையில் இன்னுமொறு சிகரட் கம்பனிக்கு அனுமதி வழங்குவதால், சட்டவிரோத சிகரட் வியாபாரத்தினை தடுக்க முடியுமா?

9. தற்போது எமது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய செயற்திட்டங்கள் மற்றும் முதலீடுகள் என்பன சீன கம்பனிகள் மற்றும் சீன அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சீன சிகரட் தொடர்பில் எமது தேவைக்கேற்ப வரி அறவீடு மேற்கொள்ள முடியூமா?

10. எமது நாட்டின் முழு சனத்தொகையில் சொற்ப அளவில் இருக்கின்ற மற்றும் தற்காலிக தொழிலாளர்களாகவூம் வாழ்கின்ற சீன நாட்டவர்களின் தேவைக்காக சீன சிகரட் கம்பனிக்கு எமது நாட்டில் அனுமதியளிப்பது எந்தளவூ நியாயம்? சீன நாட்டவர்கள் வேறு ஏதேனும் பொருட்கள் கேட்பின் அது தொடர்பான நிறுவனங்களையூம் நாட்டிற்குள் அனுமதிப்பார்களா? மேலும் எமது நாட்டில் வாழும் ஏனைய நாட்டவர்கள் ஏதேனும் கேட்டால் அது தொடர்பிலும் நிதி அமைச்சர் இந்தளவூ கரிசனையூடன் செயற்படுவாரா?

எமது நாட்டின் நிதி அமைச்சு தூரநோக்கின்றி எடுத்துள்ள இந்த தீர்மானத்தினால், இலங்கை பொருளாதார, சுகாதார ரீதியான பாரிய பிரச்சனைகளுக்கும் முகங்காடுக்கும் என்பதோடு சீன நாட்டவர்களது பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தினையூம் பாதிக்கும்.

ஆகவே நிதி அமைச்சின் இத்தீர்மானத்தை மாற்றியமைப்பதற்காக நாட்டின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சு உட்பட அனைத்து பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினரும் செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: