Home / இன்றைய செய்திகள் / சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட நிகழ்வு பதுளையில்…!!

சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட நிகழ்வு பதுளையில்…!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட நிகழ்வு பதுளையில் ஆரம்பமாகியுள்ளது.

பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. மாலை 4.30 மணி அளவில் சஜித் பிரேமதாச அந்த இடத்தை சென்றடைந்தார்.

அங்கு கூடியிருந்த பெருமளவிலான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவை தோள்களில் சுமந்த வண்ணம் பிரதான மேடைவரை தூக்கி சென்றனர்.

இதன்போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய கடிதங்களையும் மக்கள் சஜித் பிரேமதாசவிடம் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: