Home / இன்றைய செய்திகள் / மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி!!

மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

மழைக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் கோலியின் 100 ஓட்டங்களின் துணையுடன் இந்தியா இந்த போட்டியில் வென்றுள்ளது.

இந்த நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும் இபின் லெவிஸூம் களம் இறங்கினர்

ஆட்டம் தொடங்கி இரண்டாவது ஓவரிலேயே மழையின் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மழைக்கு பின் தொடர்ந்து ஆடிய கெய்ல் அடித்து விளையாடினார். அரைசதம் எடுத்தார். இதன் காரணமாக, முதல் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது.

115 ஓட்டங்களை எட்டிய போது கெய்ல் லீவிஸ் ஜோடி பிரிந்தது. சாஹலின் பந்து வீச்சில் லீவிஸ் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 72 ஓட்டங்களுடன் கெய்ல் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மழையால் தடைபட்ட ஆட்டத்தில் 35 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டது. இறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் 240 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கு இலக்கு 255 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

முதலாவதாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. ரோஹித் சர்மா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தவானும் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த போட்டியைப் போல கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்திய அணியை சரிவிலிருந்து தடுத்தது இந்த ஜோடி.

விராட் கோலி 48 பந்துகளில் முதலில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கோலி 94 பந்துகளில் சதம் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 32.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: