Home / இன்றைய செய்திகள் / சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுக்க கடற்படை குழு !!

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுக்க கடற்படை குழு !!

மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், இயற்கை அனர்த்தங்களையும் முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கடற்படை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடற்படையின் மெரின் படைப்பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு, மீட்டல் மற்றும் முதலுதவி பிரிவு, விசேட படகு சேவை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய கடற்படையினர் இந்த குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

அவர்கள் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுச் செய்யப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பாலங்கள் மற்றும் கால்வாய்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை அண்மையில் முன்னெடுத்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: