Home / இன்றைய செய்திகள் / பிரதமரை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை!!

பிரதமரை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் நேற்றைய கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்தஅந்த கட்சியின் தவிசாளர், நேற்றைய கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தகுதியான வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: