Home / இன்றைய செய்திகள் / நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் கான்ஸ்டபில் பலி!!

நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் கான்ஸ்டபில் பலி!!

தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் தம்புள்ளை மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (10) 11.10 அளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபில் சேவை முடிந்து கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய ஹபரணை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த தகவல் தொழிநுட்ப அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கான்ஸ்டபில் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: