Home / இன்றைய செய்திகள் / அலி ரொஷான் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை மனுத்தாக்கல்!!

அலி ரொஷான் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை மனுத்தாக்கல்!!

அனுமதி பத்திரம் இன்றி ஐந்து யானைகளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சமரப்புலிகே நிராஜ் ரொஸான் எனப்படும் அலி ரொஸான் உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

விக்கும் களுஆராச்சி, தம்மிகா கணேபொல மற்றும் ஆதித்ய படபெதி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமைக்கான காரணம் தெளிவில்லாமல் இருப்பதால் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறினார்.

சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளுடன் தொடர்புடைய சட்டமா அதிபரின் விளக்கங்களை ஒக்டோபர் இரண்டாம் திகதி முன்வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனுமதி பத்திரம் இன்றி ஐந்து யானைகளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சமரப்புலிகே நிராஜ் ரொஸான் எனப்படும் அலி ரொஸான் உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் பொது உடமை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்

வழக்கில் வனவிலங்கு அதிகார சபையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் உபாலி பத்மசிறி மற்றும் யானைகள் பதிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய எழுதுவினைஞர் பிரியங்க சஞ்சீவனி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: