Home / இன்றைய செய்திகள் / அனுச – லலித்தின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நாள் குறிப்பு!!

அனுச – லலித்தின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நாள் குறிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று (11) நீதிபதி அச்சல வெங்கபுலி முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சில் துணிகளை பகிர்ந்தளித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50 மில்லியன் ரூபா அபராதத்தையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விதித்திருந்தார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் அதனால் தம்மை அந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேமுறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னைய அரசாங்க காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளுக்கு சில் துணிகளை பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மூன்று வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அவர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: