Home / இன்றைய செய்திகள் / எத்தியோப்பிய பிரதமருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு!!

எத்தியோப்பிய பிரதமருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு!!

உலகில் உள்ள 6 முக்கியத் துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த ஆண்டுக்கான மருத்து துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டிக் குழு அறிவித்துள்ளது.

போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜோன் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: