Home / இன்றைய செய்திகள் / சுற்றுச்சூழல் அழிவுக்கு ஆதரவளித்த அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும்!!

சுற்றுச்சூழல் அழிவுக்கு ஆதரவளித்த அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும்!!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் வன வளங்களை அதிகரிப்பதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டத்திங்கள் காரணமாக நாட்டின் வன அடர்த்தி அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை புரிந்த அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஹபரனை கல்லொயா வன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தேசிய மரம் நடுகை திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: