Home / இன்றைய செய்திகள் / ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை!!

ஜனநாயக ரீதியிலான ஆட்சி மீது கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லை!!

80 பக்கங்களை கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற பதம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் ஜனநாயக ரீதியிலான ஆட்சி தொடர்பில் அவருக்கு எந்தவித அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் இல்லை என்பது தெளிவாவதாக பிரதமர் கூறியுள்ளார்.

கொழும்பு மாளிகாவத்த மற்றும் வாழைத்தோட்டம் பகுதியிகளின் நேற்று (09) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நீதி மற்றும் சகவாழ்வை தமது கைகளில் எடுத்து செயற்பட்ட ஏதேச்சதிகாரமுள்ளவர்கள் மீண்டும் ஆட்சியை கைபற்றுவதை தடுத்து தற்போதுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயக சூழலை மேலும் பலப்படுத்தி முன் செல்ல சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்…

´2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தனது அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது மற்றும் ஜனாநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கு பயமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியது. எனவே அவற்றை பாதுகாத்து முன்னோக்கி பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு.

கோட்டாபய ராஜபக்ஸ 80 பக்கங்களை கொண்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற பதத்தை பயன்படுத்தி உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.

நாம் ஏற்படுத்திய சுயாதீன குழுக்களை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமா? அவற்றை பலப்படுத்தி முன்னோக்கி செல்வதா? அப்படி இல்லாவிடின் அவற்றுக்கு மாற்று வழியை தேடப்போகின்றீர்களா? வெள்ளை வேன் காலசாரத்தை ஒழிக்க போகின்றீர்களா?

ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதை நிறுத்த போகின்றீர்களா? நீதிமன்றத்தின் சுயாதீனதன்மை பாதுகாக்கின்றீர்களா? மக்கள் மத்தியில் எழுந்துள்ள இவ்வாறான கேள்விகளுக்கு கோட்டாபய ராஜபக்ஸ பதிலளிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதே பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது. எனவே ஜனநாயகம் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாத ஒருவருக்கு வாக்களிப்பதில் எதேனும் நன்மை இருக்கின்றதா?

எனவே ஜனநாயகத்தை பாதுகாப்பது தொடர்பில் சிறந்த நோக்கம் உடைய சஜித் பிரேமதாசவிற்கு உங்கள் வாக்குகளை வழங்குவீர்களா? அல்லது ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து எந்தவொரு நோக்கமும் அற்ற நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு அழைத்து செல்ல முற்படும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்´ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: