Home / இன்றைய செய்திகள் / கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

கதிர்காமம் பொலிஸ் பிரிவின் தனமல்வில வீதியின் போகஹ சந்தி செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி மற்றும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 4.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள போதும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: