Home / இன்றைய செய்திகள் / புதையல் தோண்டிய நால்வர் கைது!!

புதையல் தோண்டிய நால்வர் கைது!!

தெதிகம கெடவலதெனிய பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

119 என்ற அவரச அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புலத்கோஹபிட்டிய, கொட்டியாகும்புர, பெலவத்த மற்றும் பாதுக்க பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 20, 49, மற்றும் 58 வயது பிரிவுகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை இன்று (18) வரகாபொல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: