Home / இன்றைய செய்திகள் / கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கலாம்!!

கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கலாம்!!

நடைமுறையில் உள்ள தேர்தல் காலத்தில் கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவிற்கு அறியதருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கேட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்த தமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு ஓரிரு நாட்கள் கடக்கும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் தேர்தல் வன்முறை சம்பவங்களை எண்ணி கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திரமாகவும், நீதியானதுமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தாகவும் ஆனால் தற்போதைய நிலையில் அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்த சம்பந்தபட்டவர்கள் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்த வாக்களர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக செயற்படுவது பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகள் நடைபெற்றால் அது குறித்து 011 – 2889378 அல்லது 077 – 9215299 இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் அவர் அந்த அறிக்கை ஊடாக கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: