Home / இன்றைய செய்திகள் / அரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்!!

அரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்!!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

அதனடிப்படையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைத்தன்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களை இனங்காணும் நடவடிக்கை மாத்திரமே இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: