Home / இன்றைய செய்திகள் / கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய கென்ய நாட்டு பெண் கவலைக்கிடம்!!

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய கென்ய நாட்டு பெண் கவலைக்கிடம்!!

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த கென்ய நாட்டு பெண்ணை நீர்கொழும்பு ​வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய வயிற்றுக்குள் சில உருண்டைகள் வெடித்துள்ள காரணத்தால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி கட்டாரில் இருந்து வந்த குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான குறித்த பெண்ணின் பயணப்பொதியில் இருந்து 30 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகநபரான பெண் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், அவரின் வயிற்றில் மேலும் கொகேய்ன் உருண்டைகள் இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து, அவற்றை வௌியில் எடுப்பதற்காக குறித்த பெண் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் வயிற்றில் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 51 ஹெரோயின் உருண்டைகள் இருப்பதுடன் அவற்றில் சிலவே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: