Home / இன்றைய செய்திகள் / நிதி மற்றும் செயற்றிறன் தொடர்பான பொதுக் கணக்காய்வு அறிக்கை அடுத்த பராளுமன்ற அமர்வில்!!

நிதி மற்றும் செயற்றிறன் தொடர்பான பொதுக் கணக்காய்வு அறிக்கை அடுத்த பராளுமன்ற அமர்வில்!!

கடந்த நிதியாண்டில் 844 அரசு நிறுவனங்களின் நிதி மற்றும் செயற்றிறன் தொடர்பான பொதுக் கணக்காய்வு அறிக்கை அடுத்த பராளுமன்ற அமர்வில் சமர்பிக்கப்படும் என அந்த தெரிவு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை சமர்பிக்க அரச கணக்காய்வு தொடர்பான தெரிவுக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களினதும் கடந்த வருட நிதி மற்றும் செயற்றிறன் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பொதுக் கணக்காய்வு அறிக்கையை ஆய்வு செய்யும் தெரிவுக்குழு அந்த நிறுவனங்கள் சம்பந்தமான கணக்காய்வளர் நாயகத்தின் அறிக்கையை மீளாய்வு செய்வதோடு கடந்த 2015 ஆம் ஆண்டு நிதியாண்டு முதல் அனைத்து அரச நிறுவனங்களினதும் நிதி மற்றும் செயற்றிறன் கோட்பாடுகளுக்கு அமைய கணினி தகவல் தொழில்நுட்பம் குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க ஆரம்பித்ததுடன் அதற்கு ஏற்றால் போலவே தற்போது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தெரிவுக்குழு நடத்திய 26 விசாரணைகள் தொடர்பான அறிக்கை அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படும் என அந்த தெரிவு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: