Home / இன்றைய செய்திகள் / பதவி விலக கோரியுள்ள மஹிந்த தேசப்பிரிய!!

பதவி விலக கோரியுள்ள மஹிந்த தேசப்பிரிய!!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சபாநாயகர், மஹிந்த தேசப்பிரிய இந்த சந்தர்ப்பத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முழு பதவிக் காலத்தினையும் வகிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என தெரிவித்துள்ளார்.

விசேடமாக கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்ட செயற்பாடுகளை பாராட்டியுள்ள சபாநாயகர், தேர்தல் செயற்பாடுகள் மூலம் இனங்காணப்பட்டுள்ள முக்கிய மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்காகவும், எதிர்வரும் தீர்மானமிக்க தேர்தலை உகந்ததாக நடத்துவதற்காவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் செயற்பாடுகள் மிக முக்கியமாக அமைவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: