Home / இன்றைய செய்திகள் / கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!!

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிகுஞ்சு பிரதேசத்தில் இன்று (30) கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12170 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18, 55 மற்றும் 30 வயதுடையவர்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் உப்புவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: