Home / இன்றைய செய்திகள் / இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் பிணையில் விடுதலை!!

இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் பிணையில் விடுதலை!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கிய 8 சந்தேகத்திற்குரிய மீனவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலா 10 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கல்பிட்டிய தொடுவாவ பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களே இவ்வாறு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபத பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந்த மீனவர்கள் மாலைத்தீவுக்கு வடக்கே 400 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த படகில் எந்தவித பதிவும் இல்லை என்பதாலும் படகை கண்காணிக்கும் உபகரணங்கள் வேண்டும்மென்றே செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீன்பிடி படகு 28 நாட்களின் பின்னர் தெஹியோவிட்ட பகுதியை வந்தடைந்துள்ளதுடன் படகையும், மீனவர்களையும் கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்கள் கடந்த 28 ஆம் திகதி திகதி இரவு கைது செய்யப்பட்டு கடற்பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: