Home / இன்றைய செய்திகள் / பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது!!

பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது!!

ஹங்வெல்ல, எபுலேகம பகுதியில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சா போன்ற போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: