Home / இன்றைய செய்திகள் / தற்போதுள்ள சிறைச்சாலை கட்டமைப்பை மாற்றியமைப்பது அவசியம்!!

தற்போதுள்ள சிறைச்சாலை கட்டமைப்பை மாற்றியமைப்பது அவசியம்!!

இலங்கையில் மனித உரிமை தொடர்பான பொறிமுறையை சக்தி மயப்படுத்தினால் புலம்பெயர்ந்தோர், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இலங்கை சம்பந்தமான உள்ளக விடயங்களில் தலையிட முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி மொஹான் பிரியதர்சன டி சில்வா இன்று (05) முற்பகல் அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ´நீதிமன்ற வழக்குகளை நாம் கிரமமாக தயாரித்து ஆவணப்படுத்தவில்லை, எனவே முழு நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும்.

கடந்த 10 வருடங்களாக ´நியாயத்தை நிலைநாட்டும் பணிமனை´ அதாவது House Of Justice ஒன்றை உருவாக்க முயற்சிக்கப்பட்டது ஆனால் அதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன, தற்போது அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்து விரைவில் அந்த நீதிமன்ற வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றேன்.

சிறைச்சாலைகளுக்கு செல்லும் கைதிகள் தாம் முன்பு செய்த தவறுகளை விட அதிகமான தவறுகளை செய்கின்றனர். சாதாரண குற்றங்களை இழைத்தவர்கள் பாரிய குற்றமிழைத்தவர்களுடன் சேர்கின்றனர். அதனால் தற்போதுள்ள சிறைச்சாலை கட்டமைப்பை மாற்றியமைப்பது அவசியமானது´ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: