Home / இன்றைய செய்திகள் / வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் என செயல்பட்ட 3 பேர் கைது!!

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் என செயல்பட்ட 3 பேர் கைது!!

ஹபரண பொலிஸ் பிரிவில் மீகஸ் வேவ என்ற இடத்தில் உள்ள ஆயர்வேத மத்திய நிலையத்திற்கு சென்று பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து 2 பெண்களை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரண பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பொலிஸ் இலட்சினையுடனான நீல நிற தொப்பி ஒன்று மற்றும் பொலிஸ் அடையாள அட்டை கவர் ஒன்றும் பொலிஸ் ஜீப் வண்டிக்கு சமனான கருப்பு நிற ஜீப் வண்டியும் இவர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் திருகோணமலை, குருநாகல், புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 , 39 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் என்று தெரிவித்து பொதுமக்களை தவறான வழியில் இட்டுச் சென்றுள்ளனர் என்றும் விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது.

இவர்களுக்கு இன்றைய தினம்(13) அடையாள அணிவகுப்புக்காக ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: