Home / இன்றைய செய்திகள் / வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்!!

வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்!!

வட்டரெக்க இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் மத்திய நிலைய வளாகத்தில் புதிதாக மற்றுமொறு சிறைகூடத்தை அமைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.

அதன்போது சிறைக்கைதிகள் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதியிடன் எடுத்து கூறினர்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி 38 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வட்டரெக்க புனர்வாழ்வு மையத்திற்கு அருகில் புதிய சிறைக்கூடத்தை அமைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, பூசா சிறைக்கு பொலிஸ் விசேட அதிரடி படையின் பாதுகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: