Home / ஒன்றிய நிர்வாகம்

ஒன்றிய நிர்வாகம்

040
2018 ம் 2021 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”

06.05.2018 இன்று சுவிஸ்லாந்து Burgdorf மாநகரில் கூடிய “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2018 மற்றும் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.

**ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற மக்கள் சந்திப்புக்களை நடாத்தி சுவிசின் ஒவ்வொரு மாநில ரீதியாகவும் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டார ரீதியாகவும் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

*** நிர்வாகம்***
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய புதிய நிர்வாக சபை”…

** நிர்வாகசபை உறுப்பினர்கள்..
தலைவர்.. – திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்)
செயலாளர்.. – திருமதி.செல்வி சுதாகரன்
பொருளாளர்.. – திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை)
உபதலைவர்… – திரு.லிங்கம் சஞ்சய்
உபசெயலாளர்.. – திரு.ஸ்ரீபவன் சபேசன்

** செயற்குழு உறுப்பினர்கள்..

கல்விப் பொறுப்பாளர் மற்றும் கணக்காய்வாளர்..
– திரு.சின்னத்துரை இலக்சுமணன்

பதில் கணக்காய்வாளர்
– திரு.சதாசிவம் பன்னீர்செல்வம்

இளைஞர் அணிப் பொறுப்பாளர்.. –
– திரு.கனகசபை சதீஷன் (பாடன் சதீஷ்)

“இளைஞர் அணியின் பதில் பொறுப்பாளர்கள்.. –
– திரு.அரியதாஸ் பிரதீபன்
– திரு.தயாபரன் கீதன்

இளைஞர் அணியின் ஆலோசகர்…
– திரு.செல்வரத்தினம் சுரேஷ்

** ஆலோசனை சபை உறுப்பினர்கள்…
– திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன்
– திரு.சுப்பையா வடிவேலு
– திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார்
– திரு. வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் (குமார்)
– திரு.பரநிருபசிங்கம் இராஜகோபால்
– திரு.அரியபுத்திரன் நிமலன்
– திரு.சுப்பிரமணியம் அன்பரசன் (சூரிச் அன்பு)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்..
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.
06.05.2018

(*ஓரிருவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையிலும் தற்காலிகமாக ஆலோசனை சபையில் இணைக்கப் பட்டுள்ளனர், விரைவில் அவர்களின் அனுமதி பெறப்பட்டு நிரந்தரமாக இணைக்கப்படுவர்.)

– நிர்வாக சபை -“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: