Home / Tag Archives: feauters

Tag Archives: feauters

கல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு!!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு 12 நாளாக இன்றும் (21) தொடர்கிறது. இதன் காரணமாக பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்து உள்ளதுடன் விரிவுரைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

மும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மீரிகம பஸ்யாலை என்ற இடத்தில் 1,142 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மும்மொழிக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, கல்லி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More »

பிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்!!

பிரபல விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பlட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களை கைது செய்யும் போது அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சிலவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 27 முதல் 30 வயதுகளுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு …

Read More »

முகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்!!

அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எச்.ஏ.ஹலீம் வெளியிட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் தமையகம் இதனை தெரிவித்துள்ளது. அவசர கால சட்டம் தற்போது அமுலில் இல்லை எனவும் அதனால் நிகாப், புர்கா, முகத்திரை மற்றும் தலைகவசம் தொடர்பான சட்டம் தற்போது …

Read More »

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை!!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 93 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த எட்டரை மாதங்களில் 6695 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு செயற்பாடுகளை பரிமாற்றுவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு 1778 வழக்குகள் தொடர்பில் …

Read More »

புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!!

புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Read More »

தேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம் !!

கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் கிளப்பியுள்ள சர்ச்சை அவரது தேர்தல் பிரசாரத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த 2001 ஆம் …

Read More »

இ-சிகரெட் விற்பனைக்கு தடை !!

உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை தடைசெய்து ஆணை வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிக்கோட்டின், நீர், கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் எனப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக கருதப்படும் இது, புகைப்பழக்கத்தை …

Read More »

விரைவில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்!!

எதிர்வரும் வாரத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More »

லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்த குழந்தை!!

வீரகெடிய பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் சில்லில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 2 வயது 8 மாத குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியினை சாரதி முன்நோக்கி இயக்கியுள்ள நிலையில், லொறியின் பின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த குழந்தை வீரகெடிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது. சடலம் வீரகெடிய வைத்தியசாலையின் பிரேத அறையில் …

Read More »

பரசூட் விபத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் பலி!!

குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More »

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!!

நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. …

Read More »

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு!!

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் இருந்தபோது காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கவுள்ளது. தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சான்றுப்படுத்தும் அறிக்கையை முன் வைக்கும் குடும்பங்கள் இந்த இடைக்கால கொடுப்பனவு பெறத் தகுதி பெறுவர் …

Read More »

கோட்டாபயவின் கட்டுப்பணத்தை செலுத்திய சாகர காரியவசம் !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தற்போது தேர்தல் ஆணையகத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை …

Read More »

யானைகள் தாக்கியதால் நபர் ஒருவர் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யானைகளின் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (20) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 368 யூனிட் 04, ரஜஎல, கந்தளாய் பகுதியியைச் சேர்ந்த 45 வயதுடைய தீபால் அமரசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு யானைகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் மாலையில் தனது ஆற்றோரத்தில் அமைந்துள்ள காணிக்கு சென்ற போதே …

Read More »

அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்!!

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையா இல்லையா என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளும் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். இந்த …

Read More »

இந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு!!

இந்தோனேசியா காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது. குறிப்பாக, மலேசியாவில் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவானது மெல்ல அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரண பாதிப்பு என்ற அளவில் தொடங்கி, தற்போது உடல் நலத்தைப் பாதிக்கும், உயிரையே காவு வாங்கும் என்கிற அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மலேசிய மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் …

Read More »

இந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ !!

விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது. எந்தவொரு நாடும் இதுவரை ஆராய்ந்து அறிந்திடாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய இந்தியா, சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ஆம் திகதி அதிகாலை நிலவின் தென்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிகழ்வை காண்பதற்கு பிரதமர் மோடி, பெங்களூருவில் …

Read More »

கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தில் போட்டியிடுவார்!!

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) முற்பகல் மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்று விகாராதிபதி வண.மெதிரகிரியே அஸ்ஸஜி தேரரை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து …

Read More »

சவுதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு நிதியுதவி !!

சவுதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைக் கடன்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று (18) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி காலித் சுலைமான் அல் ஹுதைரி, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹார்தி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்க …

Read More »

வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட வியாபாரி!!

பொரளபனாதர வாராந்த சந்தைக்கு அருகில் வியாபாரி ஒருவர் வெள்ளை வேனில் வந்து குழு ஒன்றினால் இன்று (19) காலை 6 மணி அளவில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரளபனாதர, தெவிலியவத்த பகுதியை சேர்ந்த சுரங்க எதிரிசிங்க எனும் வியாபாரியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு செல்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பொரளபனாதர வாராந்த சந்தைக்கு அருகில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த நபரை …

Read More »

5 மீனவர்கள் கடற்படையினரல் கைது !!

இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரல் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ரோலர் ரக படகையும் கடற்படையினர் கைபற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர், யாழ். நீரியல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Read More »

ராஜித சேனாரத்ன இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்!!

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (19) ஆஜராக உள்ளார். இன்று மதியம் 1.30 மணி அளவில் அவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சரியான முறையில் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவராமல் அரசாங்கத்தின் பணத்தை செலவழித்தமை தொடர்பில் அரசாங்க வைத்திய …

Read More »

கிரனைட் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு!!

அரியாலை, அருளம்பலம் வீதியில் பழைய கிரனைட் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பழைய வீடொன்றை, வீட்டு உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியை இன்று (19) காலை ஆரம்பித்துள்ளனர். துப்பரவு பணியின் போது, கிணற்றிற்குள் இருந்து ஒரு கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிபொருட்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், பொலிஸார் துப்பரவு பணியை …

Read More »

47 வருடங்கள் கடந்து சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்!!

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. நேற்று முடிந்த 5 வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கிண்ணம், இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அவுஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கிண்ணம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி …

Read More »

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை!!

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறிய ஈரான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த …

Read More »

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய முதல் அமைச்சரின் மனைவி!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன. இந்தநிலையில் மராட்டிய முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர், “பிறந்தநாள் கொண்டாடும் தேசத் தந்தை நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நாட்டின் நன்மைக்காக இடைவிடாமல் பணியாற்றுகிறார்” …

Read More »

என்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா?

நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார். ’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை …

Read More »

அலி ரொஷான் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை மனுத்தாக்கல்!!

அனுமதி பத்திரம் இன்றி ஐந்து யானைகளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சமரப்புலிகே நிராஜ் ரொஸான் எனப்படும் அலி ரொஸான் உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தனர். விக்கும் களுஆராச்சி, தம்மிகா கணேபொல மற்றும் ஆதித்ய படபெதி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் …

Read More »

விஷேட தேவையுடைய படைவீரர்கள் இராணுவ தளபதியுடன் சந்திப்பு!!

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தலைமையகத்திற்கு இன்று பகல் (18) ஆம் திகதி வருகை தந்த பாதிப்புற்ற விஷேட தேவையுடைய படை வீரர்கள் இராணுவ தளபதியை சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பாக கலந்துயாடலை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது இராணுவத்தில் காயமுற்ற அதிகாரியாக நான் இருந்தமையால் விஷேட தேவையுடைய படை வீரர்களது நிலைமைகளை நான் நன்கு அறிவேன். ஆகையால் விஷேட, தேவையுடைய படை …

Read More »

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை!!

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான தொடர்பு இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கும் வலுவூட்டுவதற்கும் சாதகமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் சபை உறுப்பினரும் சொங்ஜிங் (Chongqing) நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான சென்மினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சர்வதேச …

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் கையேற்றல் நாளை முதல் ஆரம்பம்!!

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் …

Read More »

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் (2141/25) சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் பெறவுள்ளது. காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் …

Read More »

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி !!

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கோகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர். மித்ரபால காலமாகியுள்ளார். சுகயீனமுற்று கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 73 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஒக்டோபர் 30 வரை நீடிப்பு!!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை பாராளுமன்றத்தின் 102 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் …

Read More »

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும்!!

நாட்டில் குறிப்பாக தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி …

Read More »

வைத்தியர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில்!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் (18) 24 மணித்தியால சுழற்சி முறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அமைச்சரவை முடிவுகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் …

Read More »

நாட்டை விட்டுச் சென்ற கல்விமான்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!!

கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறை ஒன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கான முன்மொழிவு ஒன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இலங்கை பொறியியல் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (17) கொழும்பு, நீர்ப்பாசன திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் …

Read More »

மீண்டும் நடிக்க வரும் அசின் !!

கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர்கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்துகொண்டு செட்டில் ஆனார். ஒரு பெண் குழந்தைக்கும் தாய் ஆனார். இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில் அவர் …

Read More »